Release Aneesh and Drop The Blasphemy Charges! அனீஷை விடுதலை செய்

Release Aneesh and Drop The Blasphemy Charges! அனீஷை விடுதலை செய்

Started
9 January 2022
Signatures: 722Next Goal: 1,000
Support now

Why this petition matters

Started by Rishvin Ismath

Aneesh, an ex-Muslim atheist and rational thinker from Tamil Nadu, was arrested by officers from Kuniamuthur Police Station (B14), Coimbatore on 29th December 2021 for posting memes about Islam.

The next day police presented him to the courts and filed charges for blasphemy. His bail applications were rejected twice within a week. Aneesh had created a few memes to educate people about Islam and shared them on social media.

It is highly likely that his arrest was incited and influenced by Islamists (Islamic fundamentalists) as Islamists have openly threatened him several times on social media, even though the arrest was recorded as a self-inflicted action by the police.

Prior to his arrest, Aneesh lived with his wife and 3-year-old daughter. It should also be noted that he arrest took place in Coimbatore, Tamil Nadu, where an ex-Muslim activist, Farook, was killed by Islamists 5 years ago.

Now Aneesh's life has been endangered by this arrest, which was carried out at the instigation of Islamists. Following his arrest, his identity and location were exposed—endangering the safety of both Aneesh and his family.

Islamists are increasingly stifling the voices of Ex-Muslims in India, a democratic country, by using blasphemy laws to uphold Islamic blasphemy codes and extremism in the spirit of ISIS and other extremist countries such as Saudi Arabia.

Freedom of expression is the freedom that safeguards every freedom, and thus it is crucial that it be defended. Those who value democracy and freedom of expression as well as progressive causes, are urged to use their voices to call for the immediate release of Aneesh. Democracy and freedom of expression should not be subordinated to Islamic terrorism and its threats.

The Government of Tamil Nadu, the government of India and the country's law enforcement, should not bow down before Islamic extremism.

We request Hon. M.K.Stalin, Chief Minister of Tamil Nadu, India, Government of India and C. Sylendra Babu, Director General of Police, Tamil Nadu, India, to immediately release Aneesh from the detention and drop all the charges, and to ensure the freedom of expression is protected in Tamil Nadu and India.


தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் முஸ்லீம் நாத்திகரும், பகுத்தறிவு சிந்தனையாளருமான அனீஷ், இஸ்லாம் பற்றிய மீம்ஸ்களை வெளியிட்டதற்காக 29 டிசம்பர் 2021 அன்று சிவில் உடையில் வந்த கோவை குனியமுத்தூர் காவல் நிலைய (பி14) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மறுநாள் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதநிந்தனை பேசியதாக வழக்கு பதிவு செய்தனர். அவரது ஜாமீன் மனுக்கள் ஒரு வார காலத்திற்குள் இரண்டு முறை நிராகரிக்கப்பட்டன. அனீஷ் இஸ்லாத்தைப் பற்றி மக்களுக்குக் உண்மைகளை எடுத்துச் சொல்ல சில மீம்களை உருவாக்கி அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

காவல் துறையினர் சுயமாகவே கைது செய்ததாக பதிவு செய்து இருந்தாலும் கூட, இஸ்லாமியவாதிகள் (அடிப்படைவாதிகள்) சமூக ஊடகங்களில் அவரை பலமுறை பகிரங்கமாக மிரட்டியதால், அவரது கைது இஸ்லாமியவாதிகளின் தூண்டுதலின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்றே கருதப்படுகின்றது.

கைது செய்யப்படுவதற்கு முன்பு, அனீஷ் தனது மனைவி மற்றும் 3 வயது மகளுடன் வசித்து வந்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமியவாதிகளால் கொல்லப்பட்ட முன்னாள் முஸ்லீம் செயற்பாட்டாளர் ஃபாரூக் கொலை செய்யப்பட்ட கோயம்புத்தூர் நகரிலேயே அனீஷின் கைதும் இடம்பெற்றுள்ளது,

இஸ்லாமியவாதிகளின் தூண்டுதலின் பேரில் நடத்தப்பட்டதாக கருதப்படும் இந்த கைது நடவடிக்கையால் தற்போது அனீஷிற்கு ஆபத்து அதிகரித்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது அடையாளம் மற்றும் இருப்பிடம் அம்பலமாகியுள்ளன-அனீஷ் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கும் இது ஆபத்தை ஏற்படுத்தியது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆட்சி மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருப்பது போன்ற மதநிந்தனைச் சட்டங்களை இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் செயற்படுத்த முனைவதன் மூலம் இஸ்லாமியவாதிகள் முன்னாள் முஸ்லிம்களின் குரல்களை மோசமாக நசுக்க முனைகின்றனர்.

கருத்துச் சுதந்திரம் என்பது அனைத்துச் சுதந்திரத்திரங்களையும் பாதுகாக்கும் மற்றும் உறுதி செய்யும் உன்னதமான ஒன்றாகும், எனவே அது பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் முற்போக்குச் சிந்தனையை மதிப்பவர்கள், அனீஷை உடனடியாக விடுதலை செய்ய குரல் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகிய உன்னதமான விழுமியங்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும் அதன் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியக்கூடாது. மேலும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் முன் தமிழக அரசும், இந்திய அரசும், நாட்டின் சட்ட அமலாக்கத்துறையும் பலியாகக் கூடாது.

அனீஷை உடனடியாக விடுவித்து, அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடவும், கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும், தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின், இந்திய அரசு, தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சி.சைலேந்திர பாபு ஆகியோரைக் கேட்டுக் கொள்கின்றோம். தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் ஜனநாயகமும், கருத்துச் சுதந்திரமும் பாதுகாக்கப் படல் வேண்டும்.

Support now
Signatures: 722Next Goal: 1,000
Support now
Share this petition in person or use the QR code for your own material.Download QR Code

Decision-Makers